கொரோனாவால் நோயாளி இறந்தால்..... இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட விதிமுறை

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமாவோரின் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டும் என்ற அடிப்படையிலான “நிரந்தரமான நடவடிக்கை ஒழுங்குமுறை” என்ற அடிப்படையில் விதிகளை இலங்கையின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

நோய்ப் பரவலைத் தடுக்கும் வகையில் இந்தமுறை பின்பற்றப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பில் கொரோனா வைரஸால் இறந்தவரின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படாமல் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்ப்பு வெளியிப்பட்டுள்ள நிலையிலேயே சுகாதார அமைச்சு புதிய ஒழுங்குவிதிகளை அறிவித்துள்ளது.

அதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு மரணமாவோரின் உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்பதை நோயின் பரிந்துரைக்கப்பட்ட வரலாறு கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இறந்தவரின் உடல் கழுவப்படக்கூடாது. அது சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட பின்னர் தகனம் செய்யப்படும் வரை காவல்துறை, பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கண்காணிப்பில் தகனம் செய்யப்பட வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் ஒழுங்கு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.