இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான விசாக்கள் மே 12 வரை நீடிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து வகை வீசாக்களும் மே 12ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த காலநீடிப்பு மார்ச் 14ம் திகதியில் இருந்து ஏப்ரல் 12 வரை நீடிக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே தற்போது மே 12ம் திகதிவரை வீசா நீடிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. தற்போது வரையில் 885,000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இலங்கையிலும், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது.

இலங்கையில், இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையிலேயே, இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் அனைத்து வகை வீசாக்களும் மே 12ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.