பன்னல பகுதியிலிருந்து 140 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு!

Report Print Ajith Ajith in சமூகம்

களுத்துறை - பேருவளை, பன்னல என்ற இடத்தில் உள்ள 35 குடும்பங்களை சேர்ந்த 140 பேர் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பன்னல கிராமத்தில் உள்ள ஒருவர் தமக்கு தொற்று இருப்பதை அதிகாரிகளிடம் மறைத்த நிலையிலேயே அந்த பிரதேசத்தின் மக்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டாவதாக மரணமடைந்த நீர்கொழும்பை சேர்ந்தவரின் உறவினர்கள் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

43 பேர் புணாணை தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 43 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

ஏற்கனவே தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களில் இருந்த பலர் கொரோனா தொற்று இல்லையென்ற உறுதிப்படுத்தலின் பேரில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் இது வரையில், 146 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு சென்றுள்ளனர். மேலும் 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.