வெளிநாடுகளில் இருந்து வந்த 2919 பேர் சுய தனிமைப்படுத்தலுக்காக பதிவு செய்துள்ளனர் - அஜித் ரோஹன

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாடுகளில் இருந்து வந்த 2 ஆயிரத்து 913 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் சுய தனிமைப்படுத்தலுக்காக தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 16 ஆம் திகதி முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நபர்கள் இவ்வாறு தம்மை பதிவு செய்துக்கொண்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தம்மை பதிவு செய்துக்கொள்ளாத நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே அண்மையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் கலந்துக்கொண்ட அதிகாரிகளை கொச்சப்படுத்தி, அவர்களின் கடமைகளை காணொளியாக பதிவு செய்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட நபர்களுக்கு எதிராக தேவையற்ற தலையீடுகள், அரச அதிகாரிகளின் கடமைக்கு தடையேற்படுத்தியமை மற்றும் பலவந்தப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பண்டாரகமை அட்டுளுகமை மற்றும் அக்குரணை பிரதேசங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுடன் இதனை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக விசாரணைகளை நடத்த பொலிஸார் சாதாரண உடையில் குறித்த இடங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை தவிர ஊரடங்குச் சட்டம் தொடர்பான விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.