மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்ட நபர்

Report Print Steephen Steephen in சமூகம்

கம்பஹா ஹேனேகம, கஹாடான முத்தேட்டுவவத்தை பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட 28 வயதான பெண், 3 வயதான மகள் மற்றும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வீட்டின் உரிமையாளர் ஆகியோரின் சடலங்களை தாம் மீட்டுள்ளதாக மல்வத்துஹிரியபிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மனைவி மற்றும் 3 வயதான மகளை கொன்று விட்டு பெண்ணின் கணவர் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர.

வீட்டில் கட்டிலில் காணப்பட்ட பெண்ணின் சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் மகளின் கழுத்தி கீறல் காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

28 வயதான எச்.ஜீ.தில்ருக்ஷி, 3 வயதான கே.கே.ஷனுதி சாவிந்தியா ஆகியோரே கொலை செய்யப்பட்டுள்ளனர். 37 வயதான நபர் நபர் இவர்களை கொலை செய்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்த கொலைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகள் இன்று கம்பஹா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.