ஊரடங்குச் சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள் ஆறு பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தறை, திக்குவளை - ஹிரிகெட்டிய கடற்கரையில் இருந்த ஆறு வெளிநாட்டவர்கள் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் திக்குவளை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் வெளிநாட்டவர்களை ஹோட்டல் வளாகத்திற்குள் வைத்திருக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ள போதிலும் அந்த அறிவிப்பை சரியான முறையில் கடைப்பிடிப்பதில்லை என பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இன்று அதிகாலை வரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த உள்ளதாகவும் திக்குவளை பொலிஸார் கூறியுள்ளனர்.