யாழில் தனிமைப்படுத்தப்பட்ட 233 பேர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து காரணமாக இந்தியாவில் உள்ள பௌத்த புனித தலங்களுக்கு யாத்திரை சென்று திரும்பிய 233 பேர் யாழ்.. பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட பின்னர் இன்று அவர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் ஆலோசனையின்படி இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

பண்டாரவளை, மெதிரிகிரிய, கேகாலை, மாத்தறை, குருணாகல் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த இவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டதுடன் இன்று இராணுவ பேருந்துகளில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

14 நாட்கள் வீட்டில் இருந்தது போல் உணர்ந்ததாகவும் எந்த தடையுமின்றி அனைத்து வசதிகளும் கிடைத்தது எனவும் தனிமைப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர்.