கைது எண்ணிக்கை 16 ஆயிரத்து 892 ஆக உயர்வு!

Report Print Rakesh in சமூகம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 16 ஆயிரத்து 892 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் 4 ஆயிரத்து 313 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இன்று நண்பகல் 12 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான 06 மணித்தியால காலப்பகுதியில் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 768 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 902ஆக உயர்வு

பொலிஸ் ஊடரங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நேற்று (06)காலை 6 மணி முதல் இன்று (07) காலை 6 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியினுள் ஆயிரத்து 107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன்,இக்காலப்பகுதியில் 326 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 15 ஆயிரத்து 902 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 3 ஆயிரத்து 991 வாகனங்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.