குடும்பத் தகராறு காரணமாக காரைதீவில் குடும்பஸ்தரொருவர் தூக்கிட்டு தற்கொலை

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தரொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

சனசமூக வீதி, காரைதீவு 12இல் வசித்துவந்த 42 வயது நிரம்பிய கிருஸ்ணபிள்ளை தட்சணாமூர்த்தி (கண்ணன்) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஐந்து பிள்ளைகளின் தந்தை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேதபரிசோதனைக்காக சடலம் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.