அக்குறணையில் கொரோனாவை கட்டுப்படுத்துவது சிரமம்: சுகாதார மருத்துவ அதிகாரி

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றிய 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக முற்றாக மூடப்பட்டுள்ள அக்குறணை பிரதேசத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களிடம் இருந்து போதிய உதவி கிடைப்பதில்லை என அந்த பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி சஞ்ஜீவ குருந்துகஹாகொ தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த மக்கள் அதிகளவில் ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும எனவும், மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கா விட்டால், நிலைமையை கட்டுப்படுத்துவது சிரமம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த முடியாது போனால், அக்குறணை பிரதேசத்தை சேர்ந்த பலரை வேறு இடங்களுக்கு தனிமைப்படுத்த அனுப்பி வைக்க நேரிடும் எனவும் சுகாதார மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.

அக்குறணை பிரதேசத்தில் உள்ள அனைவரையும் அவர்களின் வீடுகளில் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ளதாகவும் இந்த மக்களை இதனை கடைப்பிடித்தால், நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.