ஊரடங்கு நேரத்தில் ஆற்றின் வழியாக ஊர்களுக்குள் செல்லும் நபர்கள் - ரோந்து பணியில் கடற்படை

Report Print Steephen Steephen in சமூகம்

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாண எல்லைகளை பிரிக்கும் பெந்தரை ஆற்றில் கடற்படையினர் ரோந்து பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் போது, தரை வழியாக செல்லாது படகுகள் மற்றும் கட்டுமரங்களை பயன்படுத்தி ஆற்றின் இரு கரைகளில் இருக்கும் பெந்தோட்டை, துன்துவ, பேருவளை, தர்கா நகர் ஆகிய பிரதேசங்களுக்கு சிலர் சென்று வருவதை தடுக்கவே இந்த ரோந்து பணியை ஆரம்பித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது கொரோனா பரவி வரும் சிகப்பு பிராந்தியமாக அடையாளம் காணப்பட்டுள்ள பேருவளை பிரதேச செயலாளர் பிரிவின் தர்கா நகரில் கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஆற்றின் ஊடாக துன்துவ மற்றும் தர்கா நகர் இடையில் நடக்கும் இந்த பயணங்கள் தொடர்பாக உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஊரகஸ் மங்ஹந்தி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.