முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினரால் கொரோனா பரவும் அபாயம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் மக்கள் வாழும் பகுதிகளில் நாடமாடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு சென்று பணிக்கு திரும்பும் இராணுவத்தினரை தனிமைப்படுத்துவதற்காக கேப்பாபுலவு மாதிரி கிராம அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பிலக்குடியிருப்பு பொதுநோக்கு மண்டபம் ஆகிய இடங்கள் இராணுவத்தினரால் தெரிவு செய்யப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முல்லைத்தீவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நேரங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இராணுவத்தினர் மக்கள் வாழும் பகுதியில் நடமாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் 50 மேற்பட்ட இராணுவத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் வாழும் பகுதிகளில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால் அப்பகுதிமக்கள் வாழும் பகுதிகளில் கொரோனா நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.