வவுனியாவில் தங்கியுள்ள வெளி மாவட்டத்தவர்களை பதிவு செய்ய கோரிக்கை

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்டத்திற்கு வருகை தந்து தமது சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாதுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களை பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறு வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.எம். சமன்பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் தங்கியுள்ள வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பாக அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெளிமாவட்டங்களில் இருந்து பல்வேறு தேவைகளின் பொருட்டு பலர் வவுனியாவிற்கு வருகை தந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக தமது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாதுள்ளனர்.

இவ்வாறானவர்கள் தமது விபரங்களை வவுனியாவில் உள்ள பிரதேச செயலகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.