ஊரடங்கை மீறி கைதானோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 605ஆக அதிகரிப்பு

Report Print Rakesh in சமூகம்

ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்து கொண்ட குற்றச்சாட்டில் 18 ஆயிரத்து 605 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 4 ஆயிரத்து 863 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

மார்ச் 20ஆம் திகதி மாலை 6 மணி முதல் இன்று(08) மாலை 6 மணி வரையான காலப்பகுதியினுள்ளேயே இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய, இன்று நண்பகல் 12 மணி முதல் இன்று மாலை 6 மணி வரையான கடந்த 06மணித்தியால காலப்பகுதியினுள் மட்டும் ஊரடங்குச் சட்டத்தை மீறி நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 605 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், 196 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.