இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை நகரங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு!

Report Print Murali Murali in சமூகம்

இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தொடரும் என, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை பொலிஸ் பிரிவுகளின் ஊடான போக்குவரத்தும் முற்றாக தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு அன்றைய தினம் பிற்பகல் 4.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தனிமைப்படுத்தல் மற்றும் நோயை தடுத்தல் கட்டளைச் சட்டத்தின் கீழுள்ள பிரிவுகளை மீறுவதை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.