ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும் காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

Report Print Mubarak in சமூகம்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில் ஹோமரன்கடவெல பகுதியில் காடழிப்பில் ஈடுபட்ட இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன இலாகா உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிசாருடன் இணைந்து ஆலங்குளத்திற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அவ்வேளையில் இருவர் தப்பிச் சென்றனர். இருவரை அவர்கள் கைது செய்தனர். இவர்களால் வெட்டி வீழ்த்தப்பட்ட பெறுமதியான கருங்காலி, பாலை, வீர போன்ற 280 பாரிய மரங்களையும் அவற்றை வெட்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்கள் குச்சவெளி ஜாயா நகர், வடலிக்குளம் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

ஹோமரன்கடவெல பொலிசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.