அரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளராக ராஜா குணரத்ன நியமனம்

Report Print Ajith Ajith in சமூகம்

மனிதாபிமான சட்ட நிபுணர் ராஜா குணரத்ன, அரச சார்பற்ற அமைப்புக்களின் தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்

இந்த நியமனம் நேற்று பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவினால் வழங்கப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் அலுவலத்தில் வைத்து இந்த நியமனம் வழங்கப்பட்டது.

ராஜா குணரத்ன ஏற்கனவே திறந்த பல்கலைக்கழக சட்டப்பிரிவின் பீடாதிபதியாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.