கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பா

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா மற்றும் முக்கியமான சில ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்படடுள்ளமை வேர்ல்ட் மீற்றர் இன்ஃபே இணையத்தளத்தின் புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்க தற்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 4 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக அங்கு இதுவரை 14 ஆயிரத்து 797 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினத்தில் மாத்திரம் அமெரிக்காவில் ஆயிரத்து 940 பேர் உயிரிழந்ததுடன் கொரோனா வைரஸ் தொற்றிய 31 ஆயிரத்து 935 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

ஐரோப்பிய நாடுகளான ஸ்பெய்ன், இத்தாலி, ஜேர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்பெய்னில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 14 ஆயிரத்து 792 பேர் இறந்துள்ளனர்.

இத்தாலியில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 422 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு 17 ஆயிரத்து 669 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனியில் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அவர்களில் 2 ஆயிரத்து 349 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்சில் ஒரு லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 10 ஆயிரத்து 869 பேர் இறந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 60 ஆயிரத்து 733 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதுடன் அங்கு 7 ஆயிரத்து 97 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த சீனாவில் கொரோனா காரணமாக இரண்டு பேர் புதிதாக இறந்துள்ளனர். சீனாவில் மொத்தமாக 81 ஆயிரத்து 802 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அவர்களில் 3 ஆயிரத்து 333 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். புதிதாக அந்த நாட்டில் 62 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 571 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 88 ஆயிரத்து 550 பேர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்து 31 ஆயிரத்து 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதனை தவிர ஈரானில் 64 ஆயிரத்து 586 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதுடன் அங்கு 3 ஆயிரத்து 993 பேர் உயிரிழந்துள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் கொரோனா வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களில் 79 வீதமானவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது இங்கு முக்கியமானது.