வெளிநாடுகளில் விமான நிலையங்களில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர நடவடிக்கை

Report Print Steephen Steephen in சமூகம்

உலகில் பல நாடுகளின் விமான நிலையங்களில் சிக்கியுள்ள 33 இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஓமான், துபாய், சிங்கப்பூர், எத்தியோப்பியா, துருக்கி, மலேசியா, இந்தியாவின் புதுடெல்லி, மாலைதீவு, பிரித்தானியாவின் லண்டன், சீசெல்ஸ், பப்புவா - நியூகினியா,எகிப்து, பெரு போன்ற நாடுகளில் விமான நிலையங்களில் இந்த இலங்கையர்கள் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று தகவல்களை வெளியிட்டுள்ள அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.