மதுவரி திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

சமூக ஊடகங்கள் ஊடாக உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்யும் முறைகள் தொடர்பான காணொளிகளை பதிவிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மதுவரி திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சமூக ஊடகங்களில் உள்ளூர் மதுபான உற்பத்திகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக பலர் காணொளிகளை பதிவிட்டுள்ளதுடன் அதனை பகிர்ந்தும் வருகின்றனர்.

இந்த குற்றத்துக்காக ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் மதுபானங்களை தயாரித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.