கொரோனா பாதிப்பால் கோட்டக்கல்வி பணிப்பாளரின் மகன் லண்டனில் உயிரிழப்பு

Report Print Tamilini in சமூகம்

சில மாதங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்மை நாட்களாக நம் இலங்கையர் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகனான ஆனந்தவர்ணன் லண்டனில் இன்று காலமானார்.

ஆனந்தவர்ணன் , பிரபல தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.

இக் கொடிய கொரோனா தாக்கத்தை எதிர்க்க முடியாது உயிரிழந்துள்ளார்.

30 வயது நிரம்பிய ஆனந்தவர்ணன் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் 14 இலங்கையர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.