கண்ணபுரத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம்!

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலக நிர்வாக எல்லைக்குட்பட்ட 35ம் கிராமம் கண்ணபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. எஸ்.நாராயணன் என்ற நான்கு பிள்ளைகளையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.

இந்நிலையில், குறித்த நபர் மேலதிக சிகிச்கைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாய நடவடிக்கையின் நிமிர்த்தம் அவரது வயலுக்கு சென்ற வேளையில் எதிர்பாராத விதமாக காட்டுக்குள் நின்ற யானை குறித்த நபரை தாக்கியுள்ளது.

யானை தாக்குவதனை அறிந்த அயலவர்கள் குறித்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.