கொரோனா தொடர்பில் பொலிஸாரின் ஆலோசனைகளை மதிக்காத நிலையில் உயிரிழந்த இரத்தினகல் வியாபாரி

Report Print Vethu Vethu in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த கல்கிசை இரத்தினகல் வியாபாரியின் உடல் தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த நபர் பல முறை சுகாதார ஆலோசனைகளை தவிர்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி குறித்த நபர் நோயை மறைத்து பல இடங்கள் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் தகன நடவடிக்கை நேற்று பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் அவரது உறவினர்கள் சிலர் இணைந்திருந்தனர்.

உயிரிழந்த நபர் கல்கிஸ்ஸ பீரிஸ் மாவத்தை சேர்ந்த இரத்தனகல் வியாபாரியாகும். அவர் கடந்த 11ஆம் திகதி ஜேர்மனியில் இருந்து இன்னுமொரு நபருடன் இலங்கை வந்துள்ளார்.

காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு அவரது மகனே அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபரின் நண்பருக்கு கொரோனா தொற்று உறுதியாகியதனை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் குறித்த வர்த்தகரை வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவர் அதனை தவிர்த்துள்ளார். அவர் அவர்களின் குடும்ப வைத்தியரிடமே சிகிச்சை பெற்றுள்ளார்.

நோயின் தீவிரம் அதிகமாகிய போது அவர் இரண்டு இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளார். பொரளை மற்றும் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வைத்திய நிலையங்களில் அவர் சிகிச்சை பெற்றுள்ளார்.

அனைத்து வைத்தியசாலைகளிலும் அவரை வைத்தியசாலையில் அனுமதியாகுமாறு அறிவிக்கப்பட்ட போதிலும் குறித்த நபர் வீட்டிலேயே இருந்துள்ளார்.

அதனை தொடர்ந்து எவ்வித நோய் அறிகுறிகளையும் அறிவிக்காமல் குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.

நோய் உறுதி செய்யப்பட்ட பின்னர் குறித்த நபர் கடந்த 14ஆம் திகதியே அங்கொடை வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்.

அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னர் கடந்த மாதம் 12ஆம் திகதி இரத்தினபுரி வர்த்தகர் ஒருவரையும் சந்தித்துள்ளார்.

இதனால் குறித்த இரத்தினகல் வர்த்தருக்கும் அவரது மனைவி, மகள், தாய் மற்றும் மகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் இரத்தினபுரி பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.