மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் பெருமளவில் பொருள் கொள்வனவில் ஈடுபட்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுவரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று காலை தொடக்கம் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வவுணதீவு பகுதியில் பொதுச்சந்தை வீதிகளுக்கு மாற்றப்பட்டுள்ள வீதியோரங்கள் வர்த்தக நிறுவப்பட்டுள்ள தற்காலி விற்பனை கூடங்களில் மக்கள் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பேணாமல் குவிந்து நின்று பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிந்தது. அதேபோன்று வியாபாரிகள் சிலர் முககவசங்கள் இன்றி வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்ததையும் காணமுடிந்தது.
இதன்போது ஊடகவியலாளர்கள் சமூக இடைவெளியை பேணும் வகையில் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
வங்கிகளுக்கு சென்ற மக்களும் சமூக இடைவெளியை பேணாமல் நடந்து கொண்டதை காணமுடிந்தது.