கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது

Report Print Kamel Kamel in சமூகம்

கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரையில் மின்சாரக் கட்டணத்தை செலுத்தத் தவறிய வாடிக்கையாளர்களின் மின் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கான சலுகைக் காலம் இந்த மாதம் 30ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

மின் வெட்டை அமுல்படுத்தாது எதிர்வரும் நவம்பர் மாதம் வரையில் மின்சாரத்தை வழங்குதவற்கான இயலுமை காணப்படுகின்றது என அமைச்சர் தெற்கு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.