குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு தற்காலிகமாக மூடல்

Report Print Ajith Ajith in சமூகம்

குருநாகல் போதனா வைத்தியசாலையின் அவசர சேவை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

நேற்று இந்த பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் கட்டுபொத்தயை சேர்ந்தவரே கொரோனா வைரஸ் குணங்குறிகளுடன் கண்டறியப்பட்டார்.

இதேவேளை குறித்த நபரை நேரடியாக தொடர்பு கொண்ட வைத்தியசாலையின் 39 பணியாளர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.