இலங்கை வரும் சீனாவின் பரிசோதனை கருவிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக சீனா வழங்கி வரும் ஒத்துழைப்புக்கு அமைய சீனாவின் முதன்மை நிலை வர்த்தகரான ஜெக் மா 20 ஆயிரத்து 64 கொரோனா பரிசோதனை கருவியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த அன்பளிப்பின் பெறுமதி சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை கருவிகளை ஏற்றிய சைனா ஈஸ்டன் விமான நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் இன்றிரவு இலங்கை வந்தடையவுள்ளது.

சீனாவின் ஷெங்காய் நகரில் இருந்து இந்த விமானம் புறப்படவிருப்பதாக அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.