ஊரடங்கு சட்டத்திற்கு மத்தியிலும் கொழும்பில் வீதி விபத்து - மூவர் படுகாயம்

Report Print Vethu Vethu in சமூகம்
418Shares

கடுமையான வகையில் ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில் கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பொரளை - சேனாநாயக சந்தியில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அம்பியுலன்ஸ் வண்டியும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஊழியர்களை அழைத்து சென்ற இலங்கை போக்குவரத்து வண்டியும் நேருக்கு நேர் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அம்பியுலன்ஸ் வண்டி சாரதி, கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி மற்றும் வைத்தியசாலை ஊழியரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் பேருந்தில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.