சொந்த ஊர் மக்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிய உபுல் தரங்க

Report Print Steephen Steephen in சமூகம்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இலங்கையின் கிரிக்கெட் அணியினர் முன்னாள் வீரர்கள் மக்களுக்கு தம்மால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான உபுல் தரங்க இன்று அம்பலாங்கொடையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளை வழங்கியுள்ளார்.

அம்பலாங்கொடை உபுல் தரங்கவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தால் பாதிக்கப்படடுள்ள மக்களுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான முத்தையா முரளிதரன், குமார் சங்ககார, சனத் ஜயசூரிய, மஹேல ஜயவர்தன உட்பட பலர் உதவிகளை செய்து வருகின்றனர்.