புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

Report Print Yathu in சமூகம்
1625Shares

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மருதங்குளம் பகுதியில் காட்டிற்குள் விறகு வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விறகு வெட்ட சென்றவேளை அங்கு படையினர் நிற்பதை அவதானித்துள்ளார் இதனை அடுத்து அந்த இடத்தில் இருந்து வீடு நோக்கி செல்ல முற்பட்ட வேளை படையினரால் துரத்தி பிடிக்கப்பட்டு காட்டுக்குள் கொண்டு சென்றுள்ளார்கள்,

படையினரால் கழுத்து கையினை லொக்பண்ணி வைத்துள்ளதுடன் தாக்குதலும் நடத்தியுள்ளதாக கண்ணிற்கு மேல் காயத்துடன் குடும்பஸ்தர் கவலையாக தெரிவித்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளை கொண்ட குறித்த குடும்பத்திற்கு இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டமோ அடிப்படை வசதிகளோ அற்ற நிலையில் தற்காலிக கொட்டில் ஒன்றிலேயே வறுமையின் நிமித்தம் வாழ்ந்து வருகின்றார்கள். குடும்பஸ்தர் நாளாந்தம் கூலி வேலை செய்தே வாழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு சட்டம் வேளை வேலைக்கு செல்லமுடியாத நிலையில் கிராமத்தில் கொடுக்கப்பட்ட உணவுப்பொதியினை கொண்டு தனது குடும்பம் வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடந்த அன்று பிற்பகல் 3.00 மணிக்கு காட்டிற்குள் சென்ற தன்னை படையினர் கட்டிவைத்து தாக்கியுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தாயாரிக்கும் கோடா பெரல்கள் காட்டிற்குள் காணப்பட்டதுள்ளன. அதில் தன்னை இருத்தி படையினர் படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் அதன் பின்னர் இரவு 9.00 மணியளவில் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் தன்னை ஒப்படைத்துள்ளதாகவும் படையினர் மீது நான் தாக்குதல் நடத்தியுள்ளதான பொய் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்தார்.

காட்டிற்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என மனை அருகில் உள்ளவர்களை அழைத்து சென்று தேடியும் கிடைக்காத நிலையில் இரவு கிராம அமைப்பின் தலைவர்களை கொண்டு பொலிஸ் நிலையம் சென்றபோது புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம், படையினரால் ஒப்படைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.

கிராம அமைப்பின் தலைவர்கள் குறித்த குடும்பஸ்தர் தொடர்பில் பொலிஸாருக்கு நிலமையினை எடுத்துரைத்துள்ளதுடன் களவோ சட்டவிரோத செயற்பாடுகளிலோ இவர் ஈடுபடவில்லை என்று எடுத்துரைத்துள்ளதை தொடர்ந்து பொலிஸார் குறித்த நபரை விடுவித்துள்ளார்கள்.

கண்ணிற்கு மேல் காயமடைந்த நிலையிலும் கைவிரல் ஒன்று ஏலாத நிலையிலும் வறுமைக்கு மத்தியிலும் தனது குடும்பத்தின் உணவிற்கு என்ன செய்வது என்று தெரியா நிலையில் குறித்த குடும்ஸ்தர் வாழ்ந்து வருகின்றார்.

மருதங்குளம் பகுதியில் காட்டிற்கு விறகு வெட்டுவதற்காக பெண்கள் கூட செல்லமுடியாத நிலை காணப்படுவதாக குடும்ப பெண்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் வயோதிபர்களுக்கு பெரும் பாதிப்பு

தொடர் ஊரடங்கு சட்டத்தினால் முல்லைத்தீவில் வயோதிபர் பலரின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நோயாளர்களின் நலன் கருதிய மருத்துவ சேவைகளை வீடுகளுக்கு சென்று வழங்குவதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

எனினும் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் பிரதான வைத்தியசாலைகளுக்கு சென்று விசேட மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் நடமாடிய வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

மேலதிக தகவல் - மோகன்