தெற்காசியாவில் கொரோனாவினால் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது

Report Print Steephen Steephen in சமூகம்
43Shares

தெற்காசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தெற்காசிய நாடுகளில் கொரோனா காரணமாக 343 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்காசிய நாடுகளில் இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 6 ஆயிரத்து 771 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக பாகிஸ்தானில் 4 ஆயிரத்து 601 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 66 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 521 கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

பங்களாதேஷில் கொரோனா வைரஸ் தொற்றிய 424 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அங்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிய 190 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய தெற்காசிய நாடுகளான மாலைதீவு, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் காரணமாக மரணங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும் மாலைதீவில் 19, நேபாளதில் 9 மற்றும் பூட்டானில் 5 என கொரோனா வைரஸ் தொற்றிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.