தன்னார்வக் கொடையாளிகளால் யாழில் 64 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி!

Report Print Rakesh in சமூகம்
268Shares

தொடர் ஊரடங்கு காரணமாக அன்றாடத் தொழில் செய்வோர் உட்பட பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுக்கு அரசின் நிவாரணம் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், பல்வேறு தன்னார்வக் கொடையாளிகளால் 59 மில்லியன் ரூபாவில் 64 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 24ஆம் திகதி மதியம் 2 மணியின் பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படவில்லை.

அன்றாடத் தொழில் செய்வோர் மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமைக் கோட்டுக்கு உட்பட்டோரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும் இடர்பட்டுள்ள மக்களுக்கு அரசின் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. ஆனாலும், பல்வேறு தன்னார்வக் கொடையாளிகள் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கியுள்ளனர்.

இதுவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் ஊடாக 15கொடையாளிகளும், பிரதேச செயலகங்கள் ஊடாக 250 கொடையாளிகளும் இந்த உதவிகளை வழங்கியுள்ளனர்.

இவர்கள் 59 மில்லியன் ரூபா பெறுமதியான பொருள்களை வழங்கி வைத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தின் மொத்தச் சனத் தொகையின் அரைவாசியான 64 ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் இதுவரை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.