அரிசி ஆலைகளின் உரிமைகளது சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் நடைமுறை கொண்டு வரப்பட்ட பின்னர் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் அரிசி உற்பத்தியின் கையிருப்புகள் மற்றும் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே இந்த பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே அரசி ஆலைகளின் உரிமையாளர்கள் தமது பகுதிகளில் நெல் கையிருப்பு மற்றும் விநியோகங்களை உறுதிப்படுத்தல் அவசியம் என்று ஜனாதிபதியின் செயலாளர் பொலிஸார் அறிவித்துள்ளார்.
இந்த பிரகடனத்தின்படி சிறிய ஆலைகளின் உரிமையாளர்கள் தம்மிடம் உள்ள கையிருப்புக்களை மாவட்ட செயலக பிரிவுக்குள்ளும் மத்திய மற்றும் பெரிய ஆலைகள் தமது கையிருப்புக்களை மாவட்ட ரீதியாகவும் முழு இலங்கைக்குள் விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை மருந்துகங்கள் மற்றும் வங்கிகளும் தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக இருக்கும் என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.