அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலை

Report Print Ajith Ajith in சமூகம்
785Shares

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களான அரிசி வகைகளுக்கு அதிகூடிய சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கீரி சம்பா- கிலோ ஒன்று 125ரூபா, சிவப்பு மற்றும் வெள்ளை சம்பா அரிசி கிலோ ஒன்று-90 ரூபா, நாடு -90 ரூபா, வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி- 85ரூபா என்று அதிகார சபை அறிவித்துள்ளது.

சந்தையில் அரிசியின் விலை தளம்பல் இருப்பதை அடுத்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.