சிறுமியை வன்புணர்ச்சிக்கு உட்படுத்திய நபரை கட்சியில் இருந்து நீக்கியது பொதுஜன பெரமுன

Report Print Steephen Steephen in சமூகம்
274Shares

செவனகலை பிரதேசத்தில் 12 வயதான மூளை வளர்ச்சி குன்றிய சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய தணமல்வில பிரதேச சபையின் உறுப்பினர் நாலக ரணவீரவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதேச சபை உறுப்பினர் நாலக ரணவீரவை கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கியுள்ளார்.

கட்சியில் இருந்து விலக்கப்பட்டமைக்கான கடிதம் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கட்சியில் இருந்து நீக்கியமை சம்பந்தமாக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க பொதுஜன பெரமுன ஏற்பாடுகளை செய்துள்ளது.

தணமல்வில பிரதேச சபையின் உறுப்பினர் நாலக ரணவீர உட்பட 5 பேர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.