பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இரண்டாம் கட்ட மானியம் பயனாளிகளுக்கு விநியோகம்

Report Print Varunan in சமூகம்
59Shares

பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் பிரதேச செயலாளர் ரீ.ஜெ.அதிசயராஜ் மேற்பார்வையில் வீடு வீடாக மானியம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் வடக்கு மேற்கு சமுர்த்தி வங்கியினாடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பெற தகுதியுடையோர் பட்டியலில் காத்திருப்போர் 697 பேருக்கான இரண்டாம் கட்ட மானியமாக பயனாளிகளுக்கு தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டது.

எஸ்.தவசீலன் வங்கி முகாமையாளர், தலைமை சமுர்த்தி முகாமையாளர் கே.இதயராஜா, ஏ.எல்.எம.நஜீப் சமுர்த்தி திட்ட முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்த பணத்தை வழங்கி வைத்தனர்.

சமுர்த்தி பெறும் 5108 குடும்பத்திற்கு இதற்கு முன்னர் தலா 5000 ரூபாய் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.