நாட்டுக்கு திரும்புமாறு பிரித்தானிய மக்களிடம் கோரிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

சுற்றுலாவில் இலங்கைக்கு வந்துள்ள பிரித்தானிய பொதுமக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

பிரித்தானிய அரசாங்கத்தின் அறிவுரையை ஏற்று தமது பிரஜைகள் நாடு திரும்பவேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்.

அவர்கள் நாடு திரும்புவதற்கு உரிய விமானங்கள் சேவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களுக்காக www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/coronavirus என்ற இணைய முகவரி ஒன்றையும் உயர்ஸ்தானிகர் வழங்கியுள்ளார்.