புதுவருடத்தில் உணர்வால் ஒன்றுகூடுமாறு அவுஸ்திரேலிய பிரதமர் அழப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இந்தமுறை பொதுவிலோ அல்லது வீடுகளிலோ ஒன்றுகூட முடியாது.

அதற்கு பதிலாக உணர்வால் ஒன்று கூடுவோம் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுவாக புதுவருடம் பெரிய கொண்டாட்டம் மாத்திரமல்லாமல் நம்பிக்கைக்கான சந்தர்ப்பமுமாகும்.

துரதிஷ்டவசமாக எதிர்பாராத சுகாதார பிரச்சினையால் இந்த ஆண்டு இக்கொண்டாட்டம் வித்தியாசப்படுகிறது என்று மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.

புதுவருடத்தின்போது ஒருவருக்கொருவருக்கு இடையில் இடைவெளி அவசியம்.

எனவே அடுத்தடுத்த வருடங்களில் எமது குடும்பங்களும் சமூகமும் ஒன்றிணைந்து புதுவருடத்தை கொண்டாடுவோம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.