கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்த மேலும் நான்கு பேர் முழுமையாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் புதிய தொற்றாளிகள் எவரும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் மேலும் 224 பேர் கொரோனா தொற்றுசந்தேகத்தில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.