திருகோணமலையில் வெறிச்சோடி காணப்பட்ட மருந்தகங்கள்!

Report Print Mubarak in சமூகம்
142Shares

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் அனைத்து மருந்தகங்களையும் திறக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அனைத்து மருந்தகங்கள் மற்றும் மருந்து சாலைகளும் திறந்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து மருந்தகங்களும் இன்று காலை 8.00 மணிக்கே திறக்கப்பட்டன.

திருகோணமலை நகரிலுள்ள மருந்தகங்கள் திறந்திருந்த போதிலும் யாரும் மருந்துகள் வாங்குவதை அவதானிக்க கூடியதாக இல்லை.

பிரதான வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதோடு வீதிகளிலே பொலிஸாரின் மற்றும் வியாபார ரீதியிலான லொறிகள் செல்லுவதை மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.

கந்தளாய், கிண்ணியா, மூதூர், புல்மோட்டை, தம்பலாகாமம் மற்றும் சேருவில போன்ற பகுதிகளிலுள்ள அனைத்து மருந்தகங்களும் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.