மலையகத்திலும் புனித வெள்ளி ஆராதனைகள் இடம்பெறவில்லை

Report Print Thirumal Thirumal in சமூகம்

புனித வெள்ளிக்கிழமை ஆராதனைகள் இன்று மலையகத்திலும் நடைபெறவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனவே மக்கள் வீடுகளில் இருந்தவாரே வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவக்காலத்தின் முக்கியமான நாளாக புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இயேசு கிறிஸ்துவின் மரணப்பாடுகளையும், அவர் சிலுவையில் அறையப்பட்டதையும் நினைவுகூரும் நாளாக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வழமையாக இந்த நாளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள், தியானங்கள் நடைபெறும்.

மக்களும் பெருமளவில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.