கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க புதிய நீர்குழாய் கண்டுபிடிப்பு

Report Print Varunan in சமூகம்
178Shares

கொரோனா நோயிலிருந்து மக்களை பாதுகாக்க புதிய கால் அழுத்ததுடன் இயங்கும் கைகழுவும் நீர் குழாயொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கிருமிகளிடமிருந்து கைகளினை பாதுகாக்கவும்,சுகாதாரத்திற்கு ஏற்ற விதமாக கைகளை சுத்தம் செய்ய விஷேட தொழினுட்பங்களை பயன்படுத்தி குறித்த சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருதை சேர்ந்த மாத்தறை பல்கலை கல்லூரியில் பயின்று வரும் ஏ.எம்.எப் செளபாத் என்ற மாணவரினால் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கைகளினால் பரவும் கிருமிகளை தடுக்க கால்களின் அழுத்த உதவியுடன் இயங்க கூடிய கை கழுவும் உபகரணம் குறைந்த உற்பத்தி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது .

குறித்த கண்டுபிடிப்பு காலின் சிறிய அழுத்தம் மூலம் நீர் மேலே அனுப்பப்படுகிறது.கைகளை பயன்படுத்தி குழாயை (Tap) திறக்க தேவையில்லை, உற்பத்தி செலவு குறைவு, கைகளினால் பரவும் கிருமிகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது,இலகுவாக வேண்டிய இடத்திற்கு எடுத்து செல்ல முடியும்.

சூரிய சக்தியின் மூலம் இதற்கு மின் வழங்கப்படுகிறது.நீர் இல்லாத போது நீரை இதில் சேமித்து வைக்க முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது இவரின் மூன்றாவது கண்டுபிடிப்பு எனவும்,இவர் 2019 ஆண்டு ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் ஊடாக எடின்பார்க் சர்வதேச விருதினைபெற்ற வருமாவார். இவர் கல்முனை, ஸாஹிறா கல்லூரி பழைய மாணவரென்பதும் குறிப்பிடத்தக்கது.