கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக 5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ள லண்டன்

Report Print Ajith Ajith in சமூகம்
150Shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக லண்டன் பங்கு பரிமாற்றகம் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்துக்கு 5 மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது.

இந்த நிதியின் மூலம் கொரோனா வைரஸூக்கு எதிரான மருந்துகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இந்த நிதியன்பளிப்பு இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,உலக மக்களை மிரட்டி வருகின்ற கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை இலங்கையில் எதிர்வரும் 19 ஆம் திகதிக்குள் முடிவுக்குக் கொண்டு வரலாம் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.