தென்கொரியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று

Report Print Kamel Kamel in சமூகம்

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக கருதப்பட்ட 91 நோயாளிகளுக்கு மீளவும் நோய் தொற்று பரவியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தொற்றானது மீளவும் அவர்களது உடலிலிருந்து மீள வெளிவந்துள்ளதாகவும், மீளவும் வைரஸ் தொற்று பரவவில்லை எனவும் மருத்துவர்கள் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு மீளவும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் இது குறித்து தீவிர ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிய சுமார் 7000 பேர் குணமடைந்துள்ளதுடன் இதில் 91 பேர் மீளவும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரையில் 211 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.