திருகோணமலை பள்ளிவாசலில் தொழுகைக்காக ஒன்று கூடிய ஏழு பேரை தனிமைப்படுத்த நடவடிக்கை

Report Print Abdulsalam Yaseem in சமூகம்
308Shares

திருகோணமலை - ஜின்னா நகர் பள்ளிவாயலில் ஒன்று கூடிய ஏழு பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற வேளையில் இன்று ஜும்மா தொழுகைக்காக ஒன்று கூடிய ஏழு பேரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட அனைவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்து பின்னர் அவர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்குறிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 40 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனவும் தெரியவருகின்றது.

நாட்டில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் சட்டங்களைமதித்து செயலாற்றும் பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்