கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கின்றோம்!

Report Print Varunan in சமூகம்
96Shares

கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போரிட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தற்போது கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பாக இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் தனது கருத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றானது மிகவும் தீவிரமாக பல நாடுகளில்பரவிக வருகின்ற இந்த காலகட்டத்தில் எமது கிழக்கு மாகாணத்தில் இந்த வைரஸின்ஆதிக்கம் சற்று காணப்படுகின்றது.

இதுவரைகாலமும் கிழக்கு மாகாணத்தில் இரண்டு நபர்கள் கொரோனா தொற்றுஅறிகுறிகளுடன் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதலாவது நபர் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து தங்கியிருந்தவர் பரிசோதனையின் பின்னர்தோற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருடன் தொடர்புடைய அனைவரும்தனிமைப்படுத்தப் பட்டனர் .

அதன் பின்னர் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டபொழுது தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எவருக்கும் புவனா தோற்று இல்லை என்றதுஉறுதிப்படுத்தப்பட்டது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் இயங்கும் அக்கரைப்பற்று பிரதேசத்தைசேர்ந்த நபர் மார்ச் மாசம் 15ஆம் தேதி கட்டார் நாட்டில் இருந்து திரும்பியவேளை அவருக்கு எந்தவித அறிகுறியுடன் தென்படாத நிலையில், அவருடன் பயணித்த ஒருபயணிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எங்களுக்கு கொழும்பில் இருந்துகிடைக்கப்பெற்ற அறிவுரையின் பிரகாரம் குறித்த நபருடன் பிரயாணம் செய்த 7பேரையும் கொரோனா தொற்று சம்பந்தமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போதுஅக்கரைப்பற்றில் உள்ள நபருக்கு பொருள் ஏற்பட்டிருப்பதுஉறுதிப்படுத்தப்பட்டது. இதன்பின்னர் சுகாதார அமைச்சு மற்றும் கிழக்கு மாகாணஆளுநரின் பணிப்புரைக்கமைய வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காகவும், கண்காணிப்புக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபருடன் மிகவும் நெறி நெருங்கிய தொடர்புடைய பத்துப் பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளன அவர்கள் தொடர்பான பரிசோதனைகள் இன்று இடம்பெற்று வருகின்றது.

இதன் பின்னரே அவர்கள் குறித்த விளக்கத்தை அளிக்க முடியும். இதுவரை எங்களுக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபருடன் 10 பேர் மாத்திரம் நெருங்கிய தொடர்பைப் பேணி உள்ளனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது சம்பந்தமாக பல பொய்யான வதந்திகள் வந்த வண்ணம் உள்ளது இதன் உண்மைத்தன்மை அறியவேண்டுமெனில் எமது கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அனுப்புமாறு வேண்டிக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.