புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் இடம்பெற்ற சிறப்பு வழிபாடுகள்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

மலர்ந்திருக்கும் சார்வரி தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் அமைந்துள்ள இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் அமைதியான முறையில் நடைபெற்றன.

சார்வரி புத்தாண்டானது இன்று இரவு 7.26 மணிக்கு மலர்ந்திருந்தது.

கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த நிலையில் மக்கள் வீடுகளிலேயே அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடினர்.

இருப்பினும், வவுனியாவில் இந்து ஆலயங்களிலும் அமைதியான முறையில் வழிபாடுகள் இடம்பெற்றன.

குறைந்தளவிலான மக்கள் தொகையுடன் சமூக இடைவெளிகள் பேணப்பட்டு பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரின் அறிவுறுத்தலுக்கமைவாக வழிபாடுகள் இடம்பெற்நறன.

அந்தவகையில் வவுனியா, குட்செட் வீதி கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் ஆலய பிரதம குரு பிரபாகர குருக்கள் தலைமையில் விசேட புதுவருட வழிபாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.