இந்தியாவில் சிக்கியிருந்த 101 மாணவர்கள் நாட்டுக்கு - தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

Report Print Rakesh in சமூகம்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் 101 பேர் இன்று பிற்பகல் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான UL 1145 எனும் இலக்கம் கொண்ட விசேட விமானம் இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை இந்தியாவின் அமிர்தசரஸ் நகருக்குப் புறப்பட்டுச் சென்றது.

அங்கு தயார் நிலையில் நின்ற இலங்கை மாணவர்களை குறித்த விமானத்தில் இரு விமானிகள் உட்பட 08 பேரைக் கொண்ட குழுவினர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 101 மாணவர்களும் விசேட பஸ்களில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.