ஜா-எல பகுதியில் நாய்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை

Report Print Ajith Ajith in சமூகம்

ஜா-எல சுதுவெல பகுதியில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது.

சுதுவெல பகுதியில் பூனை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதாகவும் பின்னர் அது இரண்டு நாய்களுக்கு தொற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

எனினும் இது பொய்யான தகவல்கள் என்று ஜாஎல நகரசபையின் பொதுசுகாதார அதிகாரி கேஏ அநுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு நாய்களுக்கு ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று என்ற தகவலின் அடிப்படையில் தாம் குறித்த இடத்துக்கு சென்று பார்த்தபோது ஒரு நாய் ஒன்றுக்கு காய்ச்சல் இருந்தது. மற்றும் ஒன்றுக்கு இருமலுடன் சுவாசிக்கவும் கஸ்டப்பட்டது.

இதனையடுத்து முன்னெச்சரிக்கையாக குறித்த நாய்களை பராமரித்துவரும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

எனினும் விலங்கு வைத்தியரின் அறிக்கையின்படி இரண்டு நாய்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் ஒரு நாய் விடுவிக்கப்பட்டது. இரண்டாவது நாய்க்கு மேலதிக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜாஎல நகரசபையின் பொதுசுகாதார அதிகாரி கேஏ அநுர அபேரத்ன தெரிவித்துள்ளார்.