வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் கடற்படை வீரர் வவுனியாவில்! இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளதாக தகவல்

Report Print Theesan in சமூகம்

வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனோ பரிசோதனைக்காக இரத்த மாதிரி பெறப்பட்டுள்ளது.

வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 60 இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களுக்கு கோரோனோ தொற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த முகாமில் பணியாற்றும் வவுனியாவை சேர்ந்த கடற்படை வீரரொருவர் அண்மையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டிற்கு விடுமுறைக்காக வருகை தந்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த நபர் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரத்த மாதிரி இன்றையதினம் பெறப்பட்டுள்ளது.

குறித்த இரத்த மாதிரி அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அவருக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்ற பரிசோதனைகள் மேற்கொள்ளபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.